2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா

Sudharshini   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின்

சிலாபம், நாத்தாண்டிய கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கொட்டராமுல்ல அல்-ஹிரா மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வுகூடத்திறப்பு விழா, நேற்று திங்கட்கிழமை(01) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா எஸ். குமார ராஜபக்ஷ, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சுமல் திஷேரா, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்;டர் அப்புகாமி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், அரசியல் பிரமுகர்கள், சிலாபம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.எம்.சத்தா மங்கள, நாத்தான்டிய கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .