Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட ரத்மல்யாய - அல்காசிமி சிட்டி கிராம வீதி புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக 27 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பினையடுத்து வீதியோர புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
வீதியை புனரமைப்புச் செய்யும் முன்னர், வீதியோர வடிகாலமைப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்தே வீதியின் புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டடிருந்தன.
தற்போது வீதியோர வடிகாலமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதிப் புனரமைப்புப் பணிகளுக்காக 17 மில்லியன் ரூபாவும், 610 மீற்றர் தூரம் வைரயிலான வீதியோர வடிகாலமைப்பதற்கு 10மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
44 minute ago
47 minute ago