2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விழிப்புர்ணவு ஊர்வலம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட கடையாமோட்டை மத்திய கல்லூரியின் கல்வி மறுமலச்சி மற்றும் போதையற்ற நாடு ஆகிய இரு வேலைத்திட்டங்கள் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, பொதுமக்களுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் போதை ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை வழியுறுத்தும் வகையில், ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக கடையாமோட்டை மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.சஹீர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியில் இருந்து ஆரம்பமாகியது.

பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

கல்லூரியில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புர்ணவு ஊர்வலம், மதுரங்குளி - தொடுவாய் வீதியின் கடையாமோட்டை சந்தியின் ஊடாக கணமூலை கிராமத்துக்குச் சென்று அங்கிருந்து பல குறுக்கு வீதிகளின் ஊடாக மீண்டும்  கல்லூரியை சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X