2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கலைமகள் விழா

Niroshini   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் வருடாந்தம் நடத்தும் கலைமகள் விழாவுக்கான நாவன்மை மற்றும் கட்டுரைப் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை, மன்றத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி போட்டிகளில் கம்பஹா மாவட்டம் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்ற முடியும்.

நாவன்மை போட்டிகள் பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு எனவும் கட்டுரைப் போட்டிகள் மத்திய பிரிவு, மேற் பிரிவு, உயர் தரப்பிரிவு எனவும் நடத்தப்படவுள்ளன.  எதிர்வரும் 23ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கலைமகள் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

மாதிரி விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு மன்றத்தின் பொதுச் செயலாளர் க. நவரெட்ணராஜா  கேட்டுள்ளார். 

மேலதிக தகவல்களுக்காக  பொதுச் செயலாளரின் 077-7788937  என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X