Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணமென வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமின்றி தண்டனை வழங்கப்படாமல், போதைப் பொருளை விநியோகிக்கும் வியாபாரிகளுக்கும் கடும் தண்டனை வழங்குவதும், பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்படுவதன் மூலமும்தான் போதைப்பொருள் பாவனையை முற்றாக கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்புதல், அதனை முற்றாக இல்லாதொழித்தல் தொடர்பாக மாவட்ட ரீதியாக விழப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புத்தளம் மாவட்டத்துக்கான நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று வெள்ளக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க, புத்தளம் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், இதனைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் அசமந்தப் போக்கு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வருகை தந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஹன கீர்த்தி திஸாநாயக்க தலைமையிலான குழுவினரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.
சமூகத்தின் மத்தியில் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற போதைப்பொருள் பாவனையினால் இன்று பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பாவiனாயளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரம், அதனை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனபதே மக்களின் எதிர்பார்ப்பு.
வெளிநாடுகளில் இருந்து மாத்திரம் போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுவதில்லை. உள்ளூரிலும்; தாராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்கு பொலிஸாரும் ஹலால் திணைக்களத்தினரும் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.
போதைப்பொருள் பாவனை பற்றி மக்கள் இரகசியமாகத் தகவல் வழங்கும் அதேநேரம், பொதுமக்கள் வழங்கிய தகவலின் படி கஞ்சா, ஹெரோய்ன் ஆகிய போதைப்பொருள் வியாபாரிகள் கைதுசெய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலயங்களிலேயே விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர்.
கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசியல் தலையீடுகள் காணப்பட்டு வந்தன. போதைப்பொருள் வியாபாரியொருவர் கைதுசெய்யப்பட்டால், அரசியல் தலையீடு காரணமாக அவர் உடன் விடுலை செய்யப்படுவார்.
ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என நம்புகிறோம். எனினும், ஏன் இந்த போதைப்பொருள் பாவனையை அழிக்க முடியாது?
எனவே, பாடசாலை, மதத் தளங்கள் மற்றும் கல்வி காரியாலயத்துக்கு அருகில் காணப்படுகின்ற மதுபானக் கடைகளை அகற்றுவதற்கும் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற போதைப்பொருள் பாவனையை புத்தளம் மாவட்டத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கும் அனைவரும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என்பதையே அக்கலந்துரையாடலில் வலியுறுத்தியிருந்தேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
52 minute ago
55 minute ago