Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
“முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் நான். அப்படிப்பட்ட கட்சிக்கு நான் என்றுமே திரும்பி செல்ல போவதில்லை” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஒரு காலத்தில் புத்தளம் நகரில் வளர்த்தெடுத்தவன் நான். 1978ஆம் ஆண்டு புத்தளம் தொகுதியில் நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பொறுப்பேற்றபோது வெறுமனே 9,000 வாக்குகளே இருந்தன. 1994ஆம் ஆண்டு வரை அதனை வளர்த்தெடுத்து 35,000 வாக்கு வங்கிகளை தக்க வைத்தவன்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்களான அனுர பண்டாரநாயக்க போன்றவர்கள் கட்சியை விட்டு சென்றாலும் நான் விலகி செல்லாதவன். 15 வருடங்களாக ஐ.தே.கட்சி என்னை அழைத்தும் நான் செல்லவில்லை. அதனோடு இணைத்திருந்தால் நான் வெற்றி பெற்று இருப்பேன். ஆனால் கட்சியின் விசுவாசத்துக்காக நான் அதிலிருந்து விலகி செல்லவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காக கஷ்டப்பட்டு, சொத்துக்களை இழந்த என்னைத்தான் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் வெளியேற்றினார்கள். இப்படியாக என்னை தூக்கி எறிந்த நிலையில்தான் என்னை பாதுகாப்பதற்காக கைத்தொழில் வாணிப துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்னை அவரது கட்சியில் போட்டியிட வைத்து எனக்காக செலவழித்து குறைந்த வாக்குகளால் நான் தோல்வியுற்றாலும் புத்தளம் மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும், புத்தளம் நகரம் அபிவிருத்திகளை காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாடாளுமன்ற உறுப்புரிமையையும் பெற்றுத்தந்துள்ளார்.
இத்தகைய உதவிகளை தந்த ஒருவருக்கு நான் துரோகம் செய்ய போவதில்லை. என்னை தூக்கி எறிந்த மஹிந்தவுக்கு பின்னால் செல்வதற்கு நான் ஒரு மடையனுமில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago