Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
பன்னல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மும்மானை முஸ்லிம் கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அக்கிராமத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் உடமைகள் என்பனவற்றை பாதுகாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவர்ஷா நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ரிஷ்வி ஜவர்ஷாஇ எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் நேற்று புதன்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரை நேரில் சந்துத்து குறித்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ரிஷ்வி ஜவர்ஷா குறிப்பிடுகையில்,
“மும்மானை கிராமத்திலுள்ள கனிஷ்ட முஸ்லிம் வித்தியாலயத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் விளையாட்டு மைதானத்தை காணியை பொது மைதானத் தேவைக்காக விட்டுக்கொடுக்குமாறு கோருகின்றனர்.
குறித்த மைதானம் முஸ்லிம் பாடசாலைக்குச் சொந்தமானது என்பதற்கு சகல ஆதாரங்களும் கைவசம் இருக்கின்ற நிலையில் அங்குள்ள ஒருசில ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பலவந்தமாக அந்தக் காணியை கைப்பற்றுவதற்கும் முஸ்லிம் மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சி குழுக்கூட்டத்தின்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இக்கிராமத்தின் பாடசாலை மைதானப்பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பிரதமர் ரணில் விகரமசிங்க, குறித்த பிரதேசத்துக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியான வழங்குமாறு பாதுகாப்புபு தரப்பினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், மும்மானைக் கிராமத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக விஷேட அதிரடிப்படையினரையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, இதுதொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இராணுவ கட்டளையிடும் அதிகாரியை தொடர்புகொண்ட அமைச்சர் ஹக்கீம் மும்மானைக் கிராமத்துக்கு உடனடியாக விஷேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டக்கொண்டார்.
இதற்கிணங்க, உடனடியாக விஷேட அதிரடிப்படையினரையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவ கட்டளையிடும் அதிகாரி அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குறுதியளித்தார்.
குறித்த முஸ்லிம் பாடசாலை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் பெரும்பான்மை இன பாடசாலையொன்று உள்ளது. அதில் 68 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அந்த பெரும்பான்மை பாடசாலைக்கொன்று மைதானம் ஒன்றும் உள்ளது.
அதுதவிர, அந்தப்பிரதேசத்தில் இருக்கின்ற வயல் காணியொன்றை கொள்வனவு செய்து அதனை மைதானமான புனரமைத்து தருவதாகவும் கூறியிருக்கிறேன். ஆனால், இது மைதானத்தின் காணிக்குரிய பிரச்சினையாக காணப்படவில்லை. இது இனவாதத்தையும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த விடயத்தில் நாம் மிகவும் பொறுமை காத்து வருகிறறோம். குறித்த மைதானம் முஸ்லிம் பாடசாலைக்குச் சொந்தமானது என்தற்குரிய ஆதாரங்கள் நிறையவே உள்ளன. வர்த்தமானி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பன்னல பிரதேச செயலாளரும் அறிவித்துள்ளார். குறித்த மைதானம் முஸ்லிம் பாடசாலைக்குச் சொந்தமானதே என பிரதேச செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் அது நீண்ட காலமாக பொதுமைதானமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு அந்த மைதானத்திற்கு பாதுகாப்பு வேலியின்மையே காரணமாகும். எனினும், குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
எனவே, இந்த சிறிய பிரச்சினையை பெரிதாக்கி எமது மும்மானை முஸ்லிம் கிராமத்தில் அமைதியின்மையை ஏற்பாடுத்தாமல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், சொத்துக்கள் என்பனவற்றுக்கு சேதம் விளைவிக்காமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகைள மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நானும் மாகாண சபை உறுப்பினர் நியாஸும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago