2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

4 வயது சிறுவனை காணவில்லை

George   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேசத்தில் 4 வயது சிறுவன், இனந்தெரியாத பெண்ணால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (09) முற்பகல் 11.30 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முஹம்மது ஹுசைன் என்பவரின் மகனான முஹம்மது பாதிர் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

யாசகம் கேட்பதற்காக வந்த பெண், சிறுவனை இறுக அணைத்து தூக்கிச் சென்றதாக குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, யாசகம் வாங்க வந்ததாக கூறப்படும் பெண்மணியோடு சேர்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி,  புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார், சந்தேகநபரான மற்றப் பெண்ணை தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X