2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கனரக வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் வான்வீதியில் கனரக வாகனத்தினை பாதுகாப்பற்ற முறையில் பின்னால் செலுத்திய போது அதில் மோதுண்டு 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தினை செலுத்திய புத்தளம் நகர சபையின் சுயேட்சை குழு உறுப்பினர் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று பிற்பகல் தனது வீட்டு வளாகத்தில் வைத்து வாகனத்தினை பின்னால் செலுத்தியுள்ளார். அச்சமயம் அவரின் உறவினரின் குழந்தையே வாகனத்தின் பின்னால் மோதுண்டு உயிரிழந்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஆயிசா சம்லத் சனா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். தலை நசுக்கப்பட்டு மூளை பாதிக்கப்பட்டதினால் உயிரிழப்பு ஏற்பட்டதாக திடீர் மரண விசாரனை அதிகாரி பி.எம். ஹிசாம் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .