2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அடைமழையால் பொலன்னறுவையில் 10,000 ஏக்கர் நெற் காணிகள் சேதம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக குளங்கள் நிறைந்து வழிவதால் இம்முறை பெரும்போகத்தின் போது பயிரிடப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற் காணிகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா மற்றும் கவுடுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீரை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பராக்கிரம சமுத்திர நீரினால் ஓனேகம மற்றும் கல்அமுன பிரதேசங்களிலுள்ள வயற் காணிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதேவேளை கவுடுள்ள நீர்த்தேக்க்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பினாமங்கட பகுதியைச் சேர்ந்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பொலன்னறுவை இடர் முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக இணைப்பதிகாரி உபுல் நாணயக்கார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X