2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் 130,000 தென்னங்கன்றுகளை நடுவதற்கு திட்டம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அநுராதபுரம் மாவட்டத்தில் 130,000 தென்னங்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் வீடொன்றுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் பிரதேச முகாமையாளர் டபிளியு.ஏ.எஸ்.சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கி தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X