2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்தில் 30 பேர் காயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் பிங்கிரிய பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

பிங்கிரிய போவத்தை திசோகம எனும் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த  பஸ் வீதியைவிட்டு விலகியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆண்டிகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுள் எட்டு சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவித்த பொலிஸார் காயமடைந்தவர்களுள் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்திற்குள்ளான பஸ் வண்டியின் சாரதி விபத்தையடுத்து அவ்விபடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X