2025 மே 14, புதன்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சண்டைச் சேவல்களை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  12 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், 08 சண்டைச் சேவல்களையும் 25,000 ரூபா பணத்தையும் இவர்களிடமிருந்து  கைப்பற்றியுள்ளனர்.

வென்னப்புவ, லுணுவில பண்டிருப்பு பிரதேசத்திலேயே  சேவல்களை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  12 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சூதாட்ட இடத்திலிருந்து 09 மோட்டார் சைக்கிள்கள், 02 வான்கள், 04 முச்சக்கரவண்டிகள், 02 கப் ரக வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை, ஜாஎல,  ஏக்கள போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .