2025 மே 24, சனிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படும் 2 பெண்கள் உட்பட 12 பேர் சிலாபம் மற்றும் மஹவெவ பகுதிகளில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் போக்குவரத்துத் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட 2 வான்களும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் லுனுவில, மஹவெவ, சிலாபம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் புலனாய்வு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (ஜுட் சமந்த)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X