2025 மே 10, சனிக்கிழமை

உபதலைவரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்; 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்   கைதுசெய்யப்பட்ட  கருவலகஸ்வெவ  பிரதேச சபையின் உபதலைவரை விடுவிக்குமாறு கோரி, சாலியவெவ பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேரை இன்று புதன்கிழமை அதிகாலை  விசேட பொலிஸ் குழுவினர் கைதுசெய்ததாக புத்தளம்  பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த  சிறிய உழவு இயந்திரம் ஒன்றை  வழிமறித்த சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், இப்பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி குறித்த உழவு இயந்திரத்தை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவரான  சமிந்த ருவன்சிரி பெரேராவை  கடந்த சனிக்கிழமை சாலியவெவ பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய,  குருநாகல் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். 

இந்த விசாரணையை  அடுத்து ஆனமடு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேரை கைதுசெய்துள்ளனர்.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவர் உட்பட 07  பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X