Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 02 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வீரசொக்கன்)
புத்தளம் நகர், புறநகர் பிரதேசங்களில் கடந்த 31 ஆம் திகதி முழுநாள் இடம் பெற்ற ஹெரோயின் போதைப்பொருள் தேடுதலில் 480 பக்கெற் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் பயன்படுத்திய 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வடமேல் மாகாண உதவி போதைப் பொருள் தடுப்பகப் பணிப்பாளர் கபில குமாரசிங்க, சிலாபம் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சோமவீர ஆகியோரின் அறிவுறுத்தலின்படி புத்தளம் அதிகாரி ஏ.ஆர்.லெம்பட்டின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.
புத்தளம், பாலாவி, தில்லையடி, ரத்மல்யாய போன்ற பகுதிகளில் இடமபெற்ற தேடுதலின் நடவடிக்கையின் போது மூன்று இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வாலிபர்களே கூடுதலான போதைப்பொருட்களை பாவித்து வந்துள்ளனர். இவர்கள் தினம் 10ற்கும் மேற்பட்ட பெக்கட்டடுக்களை பாவித்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
39 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago