2025 மே 14, புதன்கிழமை

மகள்களை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 120 வருட கடூழிய சிறை

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

குறைந்த வயதுடைய தனது இரண்டு மகள்மார்களையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையொருவருக்கு 120 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதவான் பேமா ஸ்வர்ணாதிபதி தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கும் 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபாவை நஷ்டஈட்டுத் தொகையாக வழங்குமாறும் 25,000 ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டதோடு இதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 வருட கடூழிய சிறைத்த தண்டனையை விதித்தும் நீதவான் உத்தரவிட்டார்.

ஹொரவப்பொத்தானை, கப்புகொள்ளாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 2011 டிசம்பர் 31ஆம் திகதி வரை மற்றும் 2011 பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து 2012 பெப்ரவரி 20ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் தனது இரண்டு மகள்மார்களையும் அடிக்கடி சந்தேகநபர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் மதுபோதையில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் 16 வயதுக்கு குறைவான தனது இரண்டு பிள்ளைகளையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதாக பிள்ளைகளின் தாய் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 2012 பெப்ரவரி 23ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலத்திலும் தனது பிள்ளைகளுடன் சந்தேக நபர் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று புதன்கிழமை (30) வழங்கப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .