2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை 5 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ்; நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் 2013ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை சபையில் சமர்பபித்தார். இதனையடுத்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் சுயேட்சை குழு உறுப்பினரும் ஆதரித்து உரையாற்றினார்கள்.

2013ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவாக 40 கோடி 51 இலட்சத்து 76 ஆயிரத்து 777 ரூபாவும் உத்தேச செலவாக 40 கோடி 50 இலட்சத்து 60 ஆயிரத்து 319 ரூபாவும் மதிப்பிடப்;பட்டுள்ளது.

'நகர சபைத் தலைவர்; தனது உரையின் போது பெரும்பாலும் 'மாநகர சபை' என்ற புதிய அத்தியாயம் புறப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் தருணத்தில் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

நாம் நகர மத்தியில் அதிநவீன வர்த்தக மையத்தினை உருவாக்கும் எமது திட்டத்தினை முன்னெடுக்கின்றோம். அதற்கு நகர மக்களின் இதயபூர்வமான ஆதரிவினை உணர்கின்றோம். எனவே இத் திட்டம் பெரும் வெற்றியை கொண்டு வரும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X