2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கல்வி பரிபாலன சேவைப் பரீட்சைக்கான வயதெல்லை 50ஆக மட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 10 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                         

கல்வி பரிபாலன சேவைப் பரீட்சைக்குத் தோற்றும் வயதெல்லையை 50 வயதாக மட்டுப்படுத்தியமையால் கல்விப் பரிபாலன சேவைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு  தயாராவிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்டத் தலைவர் கே.அமரசூரிய தெரிவித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்பரீட்சை நடைபெறவில்லை. முன்னர் இப்பரீட்சைக்குத் தோற்றும் வயதெல்லை 56ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ரத்துச் செய்யுமாறு கல்விச் சேவை அதிகாரிகளும் கல்விச் சங்கங்களும் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .