2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் 558,552 பேர் வாக்களிக்க தகுதி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 10 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
                            
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாநகரசபை தவிர்ந்த ஏனைய 18 சபைகளிலும் 190 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 558,552 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 18 சபைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பாக 94 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அவற்றில் 10 வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டிருந்தன.

பதினெட்டு பிரதேசசபைகளுக்கும் மொத்தமாக 190 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட அந்தந்த அரசியல் கட்சிகள் வழக்குகளைத் தொடர்ந்துள்ளமையினால் வழக்குகள் தொடரப்பட்டுள்ள பிரதேசசபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு;ள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .