2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெள்ளம் காரணமாக அநுராதபுரம் மாவட்ட பாடசாலைகளுக்கு ரூ.58.7 மில்லியன் நட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 07 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு 58.7 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பீ.டீ.பீ.ரோஹன தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சுமார் 100 பாடசாலைகளுக்கு வெள்ளப் பெருக்கினால் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் கிழக்கு நுவரகம் பிரதேசத்திலுள்ள 12 பாடசாலைகளே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளும் மத்திய நுவரகம் பிரதேசம், கஹட்டகஸ்திகிலிய, மதவாச்சி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 27 பாடசாலைகளும் ரம்பாவ மற்றும் பதவிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 14 பாடசாலைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாச்சியாதீவு மற்றும் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 12 பாடசாலைகளும் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, கல்நேவ, மஹவிலச்சிய, தமுத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 10 பாடசாலைகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .