2025 மே 26, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக குடியிருந்த 6 குடும்பங்கள் நீதிமன்ற உத்தரவினால் வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
   
அநுராதபுரம் ஜயந்தி மாவத்தை பகுதியில் கடந்த முப்பது வருடங்களாக ஒரே வீட்டுத்தோட்டமொன்றில் வசித்து வந்த ஆறு குடும்பங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியேற்றி வீட்டுத்தோட்டத்தை நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று சனிக்கிழமை உரிமையாளர்களிடம் பொறு ப்பளித்தனர்.

அநுராதபுரம் மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் பீ.பீ.டீ.குமார பத்திரணவுக்குச் சொந்தமான காணியில் இவர்கள் வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளனர். இச்சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு எதிராக முன்னாள் பிரதி மேயர் வழக்குத் தாக்கல் செய்ததுடன் 2005.03.02 இல் இக்காணி முன்னாள் பிரதி மேயருக்கும் உரியது என்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், தற்போதைய குடியிருப்பாளர்களை இக்காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.

எனினும், கடந்த ஆறு வருடங்களாக இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி அதே காணியில் வசித்து வந்துள்ளனர்.
                  
இந்த நிலையில் அநுராதபுரம் நீதிமன்ற பதிவாளர் ஏ.ஏ.வீ.பத்திரண தலைமையிலான நீதிமன்ற அதிகாரிகள் குழுவினர் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றி சட்டரீதியான உரிமையாளர்களான காலஞ்சென்ற முன்னாள் பிரதி மேயரின் மனைவி மல்காந்திபத்திரண, துமிந்த பத்திரண(மகன்), சகுந்தலா பத்திரண(மகள்) ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேருக்கு அநுராதபுரம் மாநகரசபை மேயர் எச்.பீ.சோமதாச தற்காலிக தங்குமிடங்களை அமைத்துக்கொடுத்து தங்கவைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X