2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 06 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர)

புத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயதான சிறுவனொருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளான்.

அத்துடன், இவ்விபத்தில்  குறித்த சிறுவனின் தந்தை மற்றும் 3 வயதான சகோதரி காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

புத்தளத்தில் தனியார் பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுகிழமையில் நடைபெறுகின்ற பாடசாலைக்கு இந்த மூவரும் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாகவும் விபத்து இடம்பெற்ற வேளையில் கல்பிட்டிக்கும் புத்தளத்திற்கும் இடையிலான கரம்ப என்னும் இடத்தில் இன்று காலை 7.30 மணியளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

தனியார் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .