2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் 8 ஆடுகள் பலி

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆடுகளை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமொன்று புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் பாதையைவிட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் 8 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்துக்குள் சுமார் 50 ஆடுகள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் விபத்தின் போது, அதிலிருந்த 8 ஆடுகளே பலியாகியுள்ளன.

அதிக வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஆடுகளை கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவை இல்லை என்ற போதும், இவ்வாறாக மிருகங்களை துன்புறுத்தும் வகையில் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என பொலிஸார் கூறினர்.

குறித்த ஆடுகள் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்படுவதாக விசாரணைகளிலிலிருந்து தெரியவந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தின் போது வாகனத்திலில் இருந்த ஆடுகள், அருகிலிருந்த மதகு ஒன்றில் வீழ்ந்துள்ளதுடன் பிரதேசவாசிகளின் உதவியுடன் அவற்றை மீட்டு, புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.ஜூட்சமந்த




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X