2025 மே 14, புதன்கிழமை

13 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 12 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

தனது 13 வயதுடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கச்சி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தந்தயினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் தொழில் பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். குறித்த சிறுமியும், அவளது இரு சகோதரிகளும் தமது தந்தையின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சிறுமி தனது தந்தையினால் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தனது தந்தையினால் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமி இது தொடர்பில் தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பாட்டி முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த புத்தளம் பொலிஸார் சந்தேக நபரைக் நேற்று கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அச்சிறுமி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடப்படுத்தப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .