2025 ஜூலை 14, திங்கட்கிழமை

200 மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் வாழ் மீனவர்களுக்கு மீன் பிடி வள்ளங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) வெட்டாளை அசனகுதூஸ் வித்தியாலயத்தில இடம்பெற்றது

புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீனவர்களுக்கு சுமார் 200 மீன்பிடி வள்ளங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கை மின்சார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே மேற்படி வள்ளங்கள் வழங்கப்பட்டதாக புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ்; தெரிவித்தார்.

மேலும் ஏனைய பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபை உறுப்பினர் டி. எம். முஜரஹிதுல்லா நகர சபை செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .