2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடமேல் மாகாண மீனவ பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
வடமேல் மாகாணத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் திட்டமொன்றினை வடமேல் மாகாண கடறதொழில் அமைச்சு மேற் கொண்டுள்ளது.வடமேல் மாகாண கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் வேண்டுகோளின் பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இதன் முதற்கட்டமாக மீனவர்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படும் முன்பள்ளி பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்படுகின்றன. நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மீன்பிடி சமூகமொன்றினை உறுவாக்குவதே தமது   நோக்கமென்று வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .