2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பாராட்டு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பு பாராட்டப்படக் கூடியது என்று தெரிவித்துள்ள சிவில் பாகாப்பு குழுக்களின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன விஜயசிங்க கடந்த காலங்களில் அவர்களின் உதவிகள் மூலம் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டதுடன், கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை புத்தளம் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அங்கு மேலும் அவர் பேசுகையில், பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் மலர்ச்சிமிக்கதாகவுள்ளது. அதற்கு காரணம் பொலீஸ் மா அதிபரின் வேலைத்திட்டங்களை கூற முடியும்.

புத்தளம் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற போதைப் பொருள் கடத்தல் முந்தல் பகுதியில் தடுக்கப்பட்டமை, பணமோசடி சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டமை என்பனவற்றை மேற்கொள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் அதிகாரிகளின் பங்களிப்பு இன்றியமையாதது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .