Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகந்தழுவை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருட்டுச் சாவி கொண்டு திறந்து அதிலிருந்த 42 பவுண் நிறையுடை தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தம்பதியினரின் காரினுள் இருந்தே இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகச் தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு கதிரானை தென்னம் தோட்டம் ஒன்றில் வைத்து சந்தேக நபர்களான இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 42 பவுண் தங்க மாலை, காப்பு, கைச் செயின் போன்ற நகைகள், 1501 குவைட் தினார் பணம், கையடக்கத் தொலைபேசி, டிஜிடல் கெமரா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இதற்கு முன்னரும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஈ.வெதசிங்கவின் ஆலோசனைக்கமைய சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திஸ்ஸ மல்தெனிய தலைமையிலான குழுவினர் இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .