2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத வெடிபொருட்கள் அழிப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஸி.சபூர்தீன்)

சட்டவிரோதமானமுறையில் பாவித்த வெடிபொருட்களை கைப்பற்றி அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள், ஜொனி வகை குண்டுகள், மிதிவெடிகள், தோட்டாக்கள் உட்பட சகல வெடி பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும் பாதாளக் குழுக்களிடமிருந்தும் மற்றும் தேடுதல் மூலமும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தேடுதல் மற்றும் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பிரிவின் வவுனியா கிளை பொலிஸ் பரிசோதகர் லால் ஜயதிலக்க தலமையிலான குழுவினரே இவ்வெடிபொருட்களை அநுராதபுரம் நாச்சியாதீவு குளத்துப் பகுதியில் பாதுகாப்பான முறையில் அழித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .