2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் சாஹிரா பாடசாலைக் கட்டிடம் நாளை திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் 3 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டிடத்தின் கீழ் மாடி மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவினால் நாளை வெள்ளிக்கிழமை மாலை 3.00  மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பொ்னாண்டோ மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வுடன் கூடியதாக புதிய அலுவலகத்திற்கு  அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாகவும் அதிபர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .