2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிலாபத்தில் கரையொதுங்கிய மர்மப்படகு

Super User   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் மாரவில பிரதேசத்தில் மர்மப் படகொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுஜித் லக்மல் எனப் பெயரிடப்பட்ட இப்படகில் பல மீன்பிடி வலைகளும் நங்கூரமொன்றும் காணப்பட்டன. இத்தகைய ட்ரோலர் படகுகளில் பொருத்தப்படும் தொடர்பாடல்  உபகரணங்களும் செய்மதி வழிகாட்டல் உபகரணமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்படகு கடந்த மூன்று நாட்களாக மேற்படி கடற்பகுதியில் மிதந்துகொண்டிருந்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .