2025 ஜூலை 21, திங்கட்கிழமை

லபுகலயில் வாகன விபத்து; ஒருவர் பலி

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஆனமடு, நவகத்தேகம, லபுகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை  7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆனமடுவயிலிருந்து நவத்தேகம நோக்கி சென்று கொண்டிருந்த டிரக்டர் ஒன்றும் எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், விபத்துடன் தொடர்புடைய டிரக்டர் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.  டிரக்டர்  சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .