2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகள், பதாதைகள் பொலிஸாரால் நீக்கம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளினதும், சுயேட்சைக் குழுக்களினதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரப் பலகைகளை கற்பிட்டி, முந்தல், புத்தளம் பொலிஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்சி அலுவலகத்தில் மாத்திரமே தமது கட்சியின் சின்னம், இலக்கம் என்பன பொறிக்கப்பட்ட பிரசார பதாதைகளை காட்சிக்கு வைக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் வைக்கப்படும் பதாதைகளை பொலிஸாரைக் கொண்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அண்மையில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர்களுடனான விஷேட சந்திப்பின் போது புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கடுமையான உத்தரவின் பின்னரும் முந்தல், கற்பிட்டி, மதுரங்குளி ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும் பதாதைகளை பொலிஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .