2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கௌரவமாக வாழ ஜனாதிபதி வழிசமைத்தார்: பசில்

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(இர்சாத் றஹ்மத்துல்லா, எம்.என்.எம். ஹிஜாஸ்)

இரு மணித்தியால கால அவகாசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 20 வருட காலமாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இம்மக்கள் மீண்டும் அவர்களது தாயகத்தில் கௌரமாக வாழும் சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 2,000 விவசாய குளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் சேதமடைந்த 146 குளங்களை புனரமைப்பு செய்யும் பணி இன்று ஆரம்பமானது.

புத்தளம் நகரமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புக்கும் யாழ்பாணத்துக்குமிடையில் இருப்பதால் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களும் எமது சகோதரர்களே. அவர்களும் சந்தோசமாக வாழ வேண்டும். இதனால் தான் அவர்கள் முன்னர் வசித்த பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

புத்தளம் பகுதியின் அனைத்த பாதைகளும் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மில்ரோய் பெர்ணான்டோ, பிரியங்கர ஜயரட்ண, தயாஸ்ரித திசேர, முன்னால் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .