2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கால்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் ஸாஹிராவுக்கும் சம்பியன்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பிரிவுக்குட்பட்ட  பாடசாலை அணிகளுக்கிடையே இன்று  நடைபெற்ற 17 வயதிற்கு  கீழ்பட்டோருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா சம்பியனாகியுள்ளது.
 
ஏழு  அணிகள் விளையாடிய இந்தப் போட்டி நொக் அவுட் முறையில் இடம்பெற்றது.

புத்தளம் ஸாஹிரா  அணியும் தில்லையடி பாடசாலை அணியும் இறுதிப் போட்டியில் விளையாடின.  புத்தளம் ஸாஹிரா  அணி  2க்கு  0  என்ற கோல் அடிப்படையில்  வெற்றி பெற்று சம்பியனாகியது.

மூன்றாமிடத்திற்கு இடம்பெற்ற போட்டியில் புத்தளம் அஸன்குத்தூஸ்   அணி  1க்கு 0  என்ற கோல் அடிப்படையில் மனல்குன்று பாடசாலை அணியை வெற்றி கொண்டு மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .