2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மூடப்பட்டிருந்த புத்தளம் எலுவன்குளம் ஊடான மன்னார் பாதை திறப்பு

Super User   / 2011 மார்ச் 14 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமுற்று போக்குவரத்து செய்ய முடியாமல் மூடப்பட்டிருந்த புத்தளம் எலுவன்குளம் ஊடான மன்னார் பாதையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இன்று திங்கட்கிழமை திறந்துவைத்தார்.

புத்தளத்திலிருந்து எலுவன்குளம் ஊடாக மன்னாருக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலயத்தில் பயணிக்க முடியும் என தெரிவித்த நாபாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் புத்தளம்  மதவாச்சி ஊடாக மன்னாருக்கு பயணிக்க வேண்டுமெனில் சுமார் 4 மணித்தியாலயம் செல்லும் என்றும் அவர் கூறினார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே  குறித்த பாதை மீளதிறக்கப்பட்டதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .