2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்களர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை'

Super User   / 2011 மார்ச் 17 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

புத்தளத்திலுள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வன்னி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மாநாட்டின் போது தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிடம் தெரிவித்திருந்தார்.

இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பதற்காக ஏற்றிக் கொண்டு சென்ற பஸ்கள் புத்தளம் மன்னார் வீதியூடாக சென்ற போது தடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணம் செலுத்தி பஸ்கள் பெற்று இடம்பெயர்ந்த மக்களை வாக்களிக்க அனுப்பியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான மற்றும் ஏனைய வசதிகளையும் வழங்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக் தெரிவித்தார்.

முசலி பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .