2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கணமூலைக் கிராமத்தில் தொடர்ந்து பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் கற்பிட்டி பிரதேசசபைக்குட்பட்ட கணமூலைக் கிராமத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் கணமூலைக் கிராமத்தின் ஊடாக ஊர்வலம் செல்லவுள்ளதாக கிடைத்த தகலையடுத்தே இக்கிராமத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இக்கிராம மக்கள் ஒன்றுகூடி மேற்படி ஊர்வலத்தை எதிர்த்து டயர்களை எரியூட்டி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த முந்தல் பொலிஸாரும்  கலகத் தடுப்புப் பொலிஸாரும்  நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேற்படி ஊர்வலத்தை இக்கிராமத்தின் ஊடாக வருவதை தடுத்து நிறுத்துவதாக பொதுமக்களிடம், பொலிஸார் தெரிவித்ததையடுத்து மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.  தற்போது கணமூலைக் கிராமத்தில் காலை, மாலை வேளைகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .