2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பலாகல பிரதேசசபைக்கு ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட இருவருக்கு சமனான விருப்பு வாக்குகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபுர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பலாகல பிரதேசசபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட இருவர் சமனான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஆர்.எம்.சரத் குலதுங்க மற்றும் எச்.எல்.இர்ஷாத் இருவரும் தலா 1840 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி குலுக்கல் முறையில் ஆர்.எம்.சரத் தெரிவு செய்யப்பட்டார். இருப்பினும் இவ்விருவரும் தலா இரண்டு வருடங்கள் பதவி வகிக்க இணக்கம் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கெக்கிராவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் ஜீ.வீ.சந்திம கமகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .