Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 20 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெபதிகொல்லாவ, ஹல்மில்லவெட்டிய பிரதேசத்தில் பொல்லால் தாக்கி கணவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 43 வயதான லொகு கமகே சரத் குமார என்பவரே கொல்லப்பட்டவராவார். இவருக்கும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த படுகொலைக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமாக பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபதிகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (M.M)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago