2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வடமத்திய மாகாணத்தில் தனவந்தர்களை ஏமாற்றி இரண்டரைக் கோடி ரூபா மோசடி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த மாதம் 15ஆம் திகதி வரை வடமத்திய மாகாணத்தில் தனவந்தர்களை ஏமாற்றி போலி தங்கநாணயங்களை விற்பனை செய்து இரண்டரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி தயானந்த தெரிவித்தார்.
                   
புதையலிலிருந்து பெறப்பட்ட தங்கநாணயங்களெனக் கூறி தங்கமுலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளை ஏமாற்றிக் கொடுத்துவிட்டு திட்டமிட்ட வகையில் பண மோசடியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் ஏமாறவேண்டாமென பல தடவைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியபோதிலும், தொடர்ந்தும் பல பிரபல்யமான தனவந்தர்கள் மிக இலகுவாக மோசடிக்காரர்களால் ஏமாற்றப்படுகிறார்களெனவும் அவர் கூறினார்.  

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய 18 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளதுடன், 15 பேர் இதுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கித்சிறி தயானந்த குறிப்பிட்டார்.

இவ்வாறான மோசடிக்காரர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டாமென மீண்டும் கேட்டுக்கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .