2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளம் வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் - குருநாகல் வீதி, தலாபொவ வாவி பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லேண்ட் மாஸ்டர் ரக வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சிறில் வசந்த என்ற மேற்படி குடும்பஸ்தரின் பின்னால் வந்த டபள் கெப் ரக வாகனமொன்று மோதியதை அடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.

இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தை அடுத்து கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், ஆணமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X