2025 மே 26, திங்கட்கிழமை

ஆயுர்வேத திணைக்கள பணிப்பாளரை திட்டியவருக்கு எச்சரிக்கை

A.P.Mathan   / 2011 நவம்பர் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள பணிப்பாளர் ஏ.எல்.யு.பீ.அல்விசுக்கு தொலைபேசி மூலம் ஏசிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அநுராதபுரம் பிரதான நீதவான் தர்ஷpக்கா விமலசிரி அவரை கடுமையாக எச்சரித்து, ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தார்.

பத்தரமுல்ல பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.ஏ.நிரஞ்சலா வீரசிங்க என்பவரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். தமக்கு தொலைபேசிமூலம் கடுமையாக ஏசியமை குறித்து அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் பணிப்பாளர் முறைப்பாடொன்றை தெரிவித்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X