Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 12 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் நகரில் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்ட முன்னால் வட மேல் மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான டி.எம்.இஸ்மாயில் 10,000 ரூபா ரொக்கம் மற்றும் இரு சரீர பிணையில் செல்ல புத்தளம் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது.
இச்சோதனையின் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரான இஸ்மாயில் ஹாஜியாரும் உள்ளடங்குவார்.
சட்டவிரோதமாக துப்பாக்கியொன்றும் அதற்கான ரவைகளையும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலே இவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டிருந்தது.
புத்தளம் நீதவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இஸ்மாயில் ஹாஜியார் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.இக்பால் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் இவர் சார்பில் ஆஜராகினர்.
இவரிடமுள்ள துப்பாக்கிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதுடன் அதற்கான ரவைகள் கொள்வனவு செய்ததற்கான பற்றுச்சீட்டுகளையும் நீதிமன்றில் சமர்பித்தனர். இதனையடுத்து பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.
இவருடன் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
38 minute ago
2 hours ago