2025 ஜூலை 16, புதன்கிழமை

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 13 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படும்  ஒருவரை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்குளேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய  குறித்த மாணவியின் தந்தையின் சகோதரரான  பெரியதந்தையெனக் தெரிவிக்கப்படும் நபரையே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வீட்டில் எவரும்  இல்லாத வேளையில் சந்தேக நபர் குறித்த மாணவியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பில் அம்மாணவி தனது பாட்டியிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0

  • hilmee Monday, 14 November 2011 06:32 AM

    வேலியே பயிரை புடுங்கி தின்னுட்டதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X