2025 மே 26, திங்கட்கிழமை

குளக்கரையில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமாங் கடவள குளக்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மஹமாங்கடவள கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பீ.டி.குணரத்ன (வயது 56) என்பவரின் சடலமென  கிராமவாசிகள் அடையாளம் காட்டியுள்ளதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபயநாயக்க தெரிவித்தார்.
    
மேற்படி தெம்பிலிபொக்குண பகுதியிலுள்ள தனது சேனைக்குச் சென்று அங்கு ஓரிரு தினங்கள் தங்கி வருவது வழக்கமாகும். அவ்வாறே சேனைக்குச் சென்ற மேற்படி நபர் மூன்று நாட்களாக வீடு திரும்பாததையடுத்து,  அவரது உறவினர்கள்  
சேனைக்குச் சென்று தேடிப் பார்த்தனர். அச்சேனையிலும் மேற்படி நபர் இல்லாததைக் கண்டு ஊர் மக்களின் உதவியுடன் தேடிப்பார்த்தபோதை அவர் குளக்கரையில் சடலமாகக் கிடந்தார்.

பின்னர் இது தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலையத்துக்கு உறவினர்கள் தெரியப்படுத்தவே குறித்த இடத்திற்கு விரைந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.  

மேற்படி நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதால் பிரேத பரிசோதனை முடிவடைந்ததும்  விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபயநாயக்க குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X