2025 மே 26, திங்கட்கிழமை

'திவி நெகும' திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்புக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 'திவி நெகும'  வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கோழி வளர்ப்புக்கான கோழிக் குஞ்சுகள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் 31 கிராம அலுவலர் பிரிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா ஆறு குடும்பங்கள் வீதம் இதற்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பத்து கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டன.

கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்கள் ஆகியோரினால் இந்த ஆறு குடும்பங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வும் முந்தல் பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.

'திவி நெகும' வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பாவித்து குடும்பத்தின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் மேலதிக வருமானம் ஒன்றை ஈடடிக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு கோழி வளர்ப்புக்கான குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X