Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 17 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
வென்னப்புவ தேவாலயத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் நாற்பது லட்சம் ரூபாய் பெறுமதியான சொகுசு கார் ஒன்று நேற்று இரவு ஏழு மணியளவில் இனம் தெரியாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளர் தனது காரை வென்னப்புவ தேவாலயத்திற்கு முன்னால் நிறுத்தி வைத்து விட்டு அருகிலிருந்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றிருந்த போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காரின் உரிமையாளர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேநேரம் இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் வென்னப்புவ பள்ளியவத்தை பகுதியில் வைத்து கத்தோலிக்க பாதிரியார் ஒருவரின் வான் ஒன்றும் இனம் தெரியாதோரினால் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025