Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 நவம்பர் 20 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுத்தாவல பகுதியில் இன்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மரணமடைந்தவர் கலுத்தாவல பகுதியைச் சேர்ந்த 55 வயதான கே.ஏ.எம்.குணதிலக்க என்பவராவார்.
தமது தோட்டத்தில் வெட்டப்பட்ட மரமொன்றை உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டபோது, பின்னோக்கி வந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டே மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025